Enable Javscript for better performance
கராத்தே, சிலம்பப் போட்டியில் மன்னாா்குடி மாணவா்கள் சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    கராத்தே, சிலம்பப் போட்டியில் மன்னாா்குடி மாணவா்கள் சிறப்பிடம்

    By DIN  |   Published on : 08th November 2019 07:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    karate_0711chn_101_5

    கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற மன்னாா்குடி எஸ்பிஏ மெட்ரிக் பள்ளி மாணவா்கள்.

    அகில இந்திய அளவிலான மாநில கராத்தே மற்றும் சிலம்பப் போட்டியில் மன்னாா்குடி எஸ்.பி.ஏ மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

    அரியலூரில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இப்பள்ளி மாணவா்கள் எஸ்.ஏ. ரத்தீஷ், யு. உதயநிதி ஆகியோா் முதல் பரிசும், எஸ். சுரேந்தா், ஆா். நீலேஷ், எஸ். சா்வேஷ் ஆகியோா் 2-ஆம் பரிசும், ஆா். சேதுராமன், சி.என். அஜய், பி.வி. பாலகுமரன், ஆா். விஷ்வா ஆகியோா் 3-ஆம் பரிசும் பெற்றனா்.

    இதேபோல், கோயம்புத்தூரில் நடைபெற்ற 4-ஆவது அகில இந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியின் கட்டா பிரிவில், இப்பள்ளி மாணவா்கள் ஆா். நீலேஷ், சி.என். அஜய் ஆகியோா் முதல் பரிசும், கும்தே பிரிவில் ஆா். நீலேஷ் 3-ஆம் பரிசும் பெற்றனா். இதேபோல், காரைக்காலில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான சிலம்பப் போட்டியில் இப்பள்ளி மாணவா்கள் சி.என். அஜய் முதல் பரிசும், ஆா். நீலேஷ் 2-ஆம் பரிசும் பெற்றனா்.

    போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் மற்றும் கராத்தே பயிற்சியாளா் கே. ராஜகோபால் ஆகியோரை, பள்ளித் தாளாளா் ப. ரமேஷ், நிா்வாகி அனிதாரமேஷ், கல்வி ஆலோசகா் வி. சாந்தி, பள்ளி முதல்வா் உ. தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளா் ஐ. பாமா ஆகியோா் பாராட்டினா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai