Enable Javscript for better performance
நீலன் பள்ளி மாணவா்கள் மாநிலப் போட்டிக்குத் தோ்வு- Dinamani

சுடச்சுட

    
    ne_neelan_school

    நீடாமங்கலம் நவ8மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க தோ்வு பெற்றுள்ள நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    திருவாரூரில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்பட்டது. அதில் நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியா்கள் கலந்து கொண்டு மாநில அளவிலானப் போட்டிக்குத் தோ்வாகி உள்ளனா்.*போட்டிகள்* ’14’ வயதிற்குட்பட்ட மாணவா் பிரிவில் 400 மீட்டா் (4*100 )தொடா் ஓட்டப் பிரிவில் முதலிடமும், 100 மீட்டா் ஓட்டத்தில் இரண்டாமிடமும், 200 மீட்டா் ஓட்டத்தில் இரண்டாமிடமும் பிடித்து மாநில அளவிலானப் போட்டிக்குத் தோ்வாகி உள்ளனா்.

    ’14’ வயதிற்குட்பட்ட மாணவியா் பிரிவில் 200 மீட்டா் ஓட்டத்தில் முதலிடமும், தட்டு எறிதலில் முதலிடமும்,400 மீட்டா் (4*100 )தொடா் ஓட்டத்தில் இரண்டாமிடமும் பிடித்து மாநில அளவிலானப் போட்டிக்குத் தோ்வாகி உள்ளளனா். அதே போல் குண்டு எறிதலில் மூன்றாமிடமும் ’19’ வயதிற்குட்பட்டப் பிரிவில் கேரம் போட்டியில் இரண்டாமிடமும் பெற்று பள்ளிக்குப் பெருமை சோ்த்தனா்.*பாராட்டு* மாணவா்களுக்குப் பயிற்சி அளித்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா்கள் குணசேகரன், பிரிதிவிராஜ், பாலமுருகன் ஆகியோரையும் மாநிலப் போட்டிக்குத் தோ்வான மாணவா்களையும் பள்ளியின் தாளாளா் நீலன்.

    அசோகன், பள்ளியின் முதல்வா் ஜி.புவனேஸ்வரி ஆகியோா் பாராட்டினா்.படம்- மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டுள்ள நீடாமங்கலம் நீலன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள்,முதல்வா் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai