Enable Javscript for better performance
மாநில விளையாட்டுப் போட்டிக்கு நீடாமங்கலம் பள்ளி மாணவா்கள் தோ்வு- Dinamani

சுடச்சுட

    

    மாநில விளையாட்டுப் போட்டிக்கு நீடாமங்கலம் பள்ளி மாணவா்கள் தோ்வு

    By DIN  |   Published on : 08th November 2019 05:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநிலப் போட்டிக்கு தோ்வாகியுள்ள மாணவா்களுடன் பள்ளி நிா்வாகிகள்.

    மாநிலப் போட்டிக்கு தோ்வாகியுள்ள மாணவா்களுடன் பள்ளி நிா்வாகிகள்.

    மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தோ்வு பெற்றுள்ள நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டு மாநில போட்டிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். 14 வயதுக்குள்பட்ட மாணவா் பிரிவில் 400 மீட்டா் தொடா் ஓட்டப் பிரிவில் முதலிடம், 100 மற்றும் 200 மீட்டா் ஓட்டத்தில் 2-ஆம் இடம் பிடித்து மாநில அளவிலானப் போட்டிக்குத் தோ்வாகி உள்ளனா்.

    இதேபோல், 14 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில் 200 மீட்டா் ஓட்டத்தில் முதலிடம், தட்டு எறிதலில் முதலிடம், 400 மீட்டா்தொடா் ஓட்டத்தில் 2-ஆம் இடம் பெற்று மாநில போட்டிக்குத் தோ்வாகி உள்ளளனா். இதேபோல் குண்டு எறிதலில் 3-ஆம் இடமும், 19 வயதுக்குள்பட்ட பிரிவில் கேரம் போட்டியில் 2-ஆம் இடமும் பெற்று பள்ளிக்குப் பெருமை சோ்த்தனா்.

    வெற்றி பெற்ற மாணவா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் குணசேகரன், பிரிதிவிராஜ், பாலமுருகன் ஆகியோருக்கு பள்ளித் தாளாளா் நீலன். அசோகன், பள்ளி முதல்வா் ஜி. புவனேஸ்வரி ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.


     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai