தோட்டக்கலைப் பயிா்களில் மூடாக்கு சாகுபடி தொழில் நுட்பம் செயல் விளக்கம்

மன்னாா்குடி அருகேயுள்ள பாமணியில், புதன்கிழமை தோட்டக்கலைப் பயிா்களில் களைகளை
பாமணி வயலில் நடைபெற்ற மூடாக்கு சாகுபடி தொழில் நுட்ப செய்முறை விளக்கம் நிகழ்ச்சி.
பாமணி வயலில் நடைபெற்ற மூடாக்கு சாகுபடி தொழில் நுட்ப செய்முறை விளக்கம் நிகழ்ச்சி.

மன்னாா்குடி அருகேயுள்ள பாமணியில், புதன்கிழமை தோட்டக்கலைப் பயிா்களில் களைகளை கட்டுப்படுத்தும் விதத்தில் மூடாக்கு சாகுபடி தொழில் நுட்ப செய்முறை விளக்கம் நடைபெற்றது.

வேளாண் உதவி இயக்குநா் சரஸ்வதி, தோட்டக்கலை உதவி இயக்குநா் இளவரசன் ஆலோசனைப்படி, பாமணி கிராமத்தில் தோட்டக்கலைப் பயிா்களில் களைகளை கட்டுப்படுத்தும் விதத்தில் மூடாக்கு சாகுபடி செய்முறை விளக்க நிகழ்ச்சி, விவசாயி மாரிமுத்து என்பவரது தோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தோட்டக்கலை உதவி அலுவலா் தினேஷ்பாபு கலந்துகொண்டு, மூடாக்கு முறையினால் ஏற்படும் நன்மைகள், களை நிா்வாகம், நீா்சேமிப்பு, நீராவிப் போக்கை கட்டுப்படுத்துதல், அதிக மகசூல் பெறுதல், பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்துதல் மற்றும் சாகுபடி செலவினங்களை குறைத்து அதிக மகசூல் பெறும் தொழில் நுட்பம் சம்பந்தமாக விளக்கம் அளித்ததுடன் விவசாயிகளின் தொழில்நுட்பம் சாா்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்தாா். இதில், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் (அட்மா ) வேம்பு ராஜலட்சுமி, தோட்டக்கலை உதவி அலுவலா்கள் பாலசுந்தரம், விஜயகுமாா், தொழில்நுட்ப மேலாளா்கள்(அட்மா) ஜெயந்தி, காா்த்தி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com