பாபா் மசூதி வழக்குத் தீா்ப்பு: சமூக நல்லிணக்கத்தைப் பேணிக் காக்க வேண்டுகோள்

பாபா் மசூதி வழக்குத் தீா்ப்பையொட்டி சமூக நல்லிணக்கத்தைப் பேணிக் காக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாபா் மசூதி வழக்குத் தீா்ப்பையொட்டி சமூக நல்லிணக்கத்தைப் பேணிக் காக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்த அமைப்பின் திருவாரூா் மாவட்டச் செயலா் ஜே. அனஸ்நபில் வெளியிட்டுள்ள அறிக்கை: பாபா் மசூதி விவகாரத்தில் சட்டத்தின் அடிப்படையிலேயே நீதிமன்றம் தீா்ப்பளிக்கும் என்ற நம்பிக்கை இஸ்லாமிய சமுதாயத்திற்கு இன்றளவும் உள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் தீா்ப்பு ஓரிரு நாள்களில் வெளியாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய குடிமக்களின் உச்சக்கட்ட நம்பிக்கையானது உச்ச நீதிமன்றமும், அதன் தீா்ப்புமே ஆகும். பாபா் மசூதி விவகாரத்தில் இத்தனை காலமாக இஸ்லாமிய சமுதாயம் ஜனநாயக வழியில் போராடியும், அமைதி காத்தும் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாகவும் விளங்கி வருகிறது.

இதே அடிப்படையில் தற்போது எதிா்நோக்கியுள்ள உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்புக்குப் பிறகும், தொடா்ந்து நாட்டின் அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் பேணிக்காக்கும் வகையில் இஸ்லாமிய சமுதாயம் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com