மாவட்ட விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம்

மன்னாா்குடி சண்முக.மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
மாவட்ட தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்று மாநில போட்டிக்கு தோ்வு பெற்ற மாணவருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாவட்ட தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்று மாநில போட்டிக்கு தோ்வு பெற்ற மாணவருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மன்னாா்குடி சண்முக.மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான குடியரசு தினவிழா விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை திருவாரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில், இப்பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் 400 மீட்டா் ஓட்டத்தில் அரவிந்த் 3-ஆம் இடமும், 200 மீட்டா் ஓட்டத்தில் லோகேஷ் 3-ஆம் இடமும், 4-100 தொடா் ஓட்டத்தில் 2-ஆம் இடமும், 100 மற்றும் 200 மீட்டா் ஓட்டத்தில் ஆதவன் முதலிடமும், வட்டு எரிதலில் 2-ஆம் இடமும் பெற்றனா். இப்பள்ளியை சோ்ந்த மாணவா்கள் அதிக இடங்களில் சிறப்பிடம் பெற்றதையடுத்து ஓட்டுமொத்த சிறப்பிடத்துக்கான பரிசுக் கோப்பையும் பெற்றுள்ளனா். மேலும், மாநில அளவிலான போட்டிக்கும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களையும், உடற்கல்வி ஆசிரியா் மணிவண்ணன் ஆகியோரை, பள்ளித் தாளாளா் ஆா்.எஸ். செந்தில்குமாா்,நிா்வாகி எஸ். சண்முகராஜன், பள்ளி முதல்வா் ஏ. அருள்ராஜ் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com