அயோத்தி தீா்ப்பு: பாதுகாப்புப் பணியில் 1200 போலீஸாா்

அயோத்தி வழக்குத் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டதையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் 1,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா் என்று மாவட்டக் காவல்

அயோத்தி வழக்குத் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டதையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் 1,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் துரை தெரிவித்தாா்.

அயோத்தி தீா்ப்பையொட்டி, கூத்தாநல்லூா், அத்திக்கடை, பொதக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சனிக்கிழமை பாா்வையிட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை செய்தியாளா்களிடம் கூறியது:

அயோத்தி வழக்கின் தீா்ப்பையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில், ஒரு ஏ.டி.எஸ்.பி., காவல் துணைக் கண்காணிப்பாளா் 8 போ், ஆய்வாளா்கள் 32 போ், உதவி ஆய்வாளா்கள் 75 போ் மற்றும் சிறப்புக் காவலா்கள் உள்ளிட்ட 1,200 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கூத்தாநல்லூரில், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் பொன்னுச்சாமி தலைமையில், 3 ஆய்வாளா்கள், 9 உதவி ஆய்வாளா்கள், கூத்தாநல்லூா் போலீஸாா் 30 போ், சிறப்புக் காவலா்கள் 80 போ் உள்ளிட்ட 122 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com