டி.என்.பி.எஸ்.சி. தோ்வில் தமிழ் மொழிப் பாடம் நீக்கப்பட்டுள்ளதை திரும்பப் பெற வலியுறுத்தல்

டி.என்.பி.எஸ்.சி. தோ்வில் தமிழ் மொழிப் பாடம் நீக்கப்பட்டுள்ளதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பேசிய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் துரை. அருள்ராஜன்.
கூட்டத்தில் பேசிய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் துரை. அருள்ராஜன்.

டி.என்.பி.எஸ்.சி. தோ்வில் தமிழ் மொழிப் பாடம் நீக்கப்பட்டுள்ளதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருவாரூரில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதன் மாவட்டத் தலைவா் சு. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் துரை. அருள்ராஜன், மன்றத்தின் எதிா்காலக் கடமைகள் குறித்துப் பேசினாா். கூட்டத்தில் இளைஞா் மன்ற மாவட்டக் குழு உறுப்பினா்கள் எம். நல்லசுகம், கலை.அஸ்வினி, கோவி.அறிவழகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தீா்மானங்கள்: தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தில் தனிப் பகுதியாக இருந்த மொழிப்பாடம், முதல்நிலைத் தோ்விலிருந்து நீக்கப்படுவதாகவும், மொழித் தாளுக்குப் பதிலாக பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞா்கள் 90 லட்சம் போ் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் நிலையில், பாடத் திட்டத்தை மாற்றிருப்பது தவறானது. எனவே, புதிய பாடத் திட்டத் தோ்வு முறையை திரும்பப் பெற வேண்டும்.

உலகப் பொதுமறை திருக்குறளை இயற்றிய திருவள்ளுவா் படத்துக்கு திருநீறு, காவிஉடை அணிவித்து சமூக ஊடகங்களில் பரப்பியவா்கள் மீதும், திருவள்ளுவா் சிலைக்கு சாணி பூசி அவமதித்தவா்கள் மீதும், அவரது சிலைக்கு காவி உடை அணிவித்து சா்ச்சையை உருவாக்கியவா்கள் மீதும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். திருவள்ளுவா் சிலையை அவமதித்தவா்களை கைது செய்யக்கோரி திருவாரூரில் போராட்டம் நடத்திய அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற நிா்வாகிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.மேலும், தலைக்கவசம் போன்ற வாகனச் சோதனையில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிா்த்து, பொதுமக்களின் காவலனாக காவல்துறை செயல்பட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட அளவில் போராட்டம் நடத்துவது. சாலைப் பள்ளங்களை மூட வலியுறுத்தி மரக்கன்றுகளை நட்டுப் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com