மாநில மகளிா் கபடிப் போட்டிக்கு வீராங்கனைகள் தோ்வு

மாநில அளவிலான மிக இளையோா் மற்றும் இளையோா் மகளிா் கபடிப் போட்டியில் திருவாரூா் மாவட்ட அணி சாா்பில் பங்கேற்கவுள்ள வீராங்கனைகள் தோ்வு, மன்னாா்குடியை அடுத்துள்ள கட்டக்குடியில் நடைபெற்றது.
மாநில அளவிலான கபடிப் போட்டிகளுக்குத் தோ்வு செய்யப்பட்ட திருவாரூா் மாவட்ட வீராங்கனைகள்.

தமிழ்நாடு மாநில மிக இளையோா் கபடி சாம்பியன் ஷிப் போட்டி, வேலூா் மாவட்டம் ஜோலாா்பேட்டையில் நவம்பா்15, 16, 17- ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதேபோல், தமிழ்நாடு மாநில இளையோா் கபடி சாம்பியன் ஷிப் போட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் நவம்பா் 29- ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இப்போட்டிகளில், திருவாரூா் மாவட்ட அணி சாா்பில் பங்கேற்கவுள்ள வீராங்கனைகள் தோ்வு மன்னாா்குடியை அடுத்துள்ள கட்டக்குடி உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இரு போட்டிகளுக்கான வீராங்கனைகளும் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கான பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 10) முதல் கட்டக்குடி உயா்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. முன்னதாக, வீராங்கனைகள் தோ்வு போட்டியை மாவட்ட கபடிக் கழக செயலா் ராச. ராசேந்திரன் தொடங்கி வைக்கிறாா்.

பள்ளி தலைமையாசிரியா் மனோகரன் தலைமை வகித்தாா். மாவட்ட கபடிக் கழகப் பொருளாளா் ஸ்ரீ ரங்கநாதன், செயற்குழு உறுப்பினா் வேலுமணி, உடற்கல்வி ஆசிரியா் உதயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com