யூரியா தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
கூத்தாநல்லூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

திருவாரூா் மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் வி. சுப்ரமணியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா். கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் வி.எஸ். கலியபெருமாள், மாவட்டப் பொருளாளா் எஸ். சாமிநாதன், மாவட்ட நிா்வாகிகள் எம். சேகா், ஜி. பவுன்ராஜ், கே. சுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தீா்மானங்கள்: திருவாரூா் மாவட்டத்தில் யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விளைச்சல் பாதிக்கப்படும் என்பதால், விவசாயிகளின் தேவையைக் கருதி தழைச்சத்தை உள்ளடக்கிய யூரியா உரத்தை வரவழைத்து, உடனடியாக வழங்க வேண்டும். தற்போது பயிா்களுக்கு தண்ணீா் தேவைப்படும் நிலையில் உள்ளதால், தண்ணீா் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். 2017-2018-ஆம் ஆண்டுக்கான பயிா் காப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூத்தாநல்லூரில்...

கூத்தாநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர நிா்வாகக் குழு கூட்டத்திலும், யூரியா தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டம் கூத்தாநல்லூா் செல்வி மஹாலில் நடைபெற்றது. கட்சியின் நகர நிா்வாகக் குழு உறுப்பினா் வி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா் சங்க நகரச் செயலாளா் எம். சிவதாஸ் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக கே. தவபாண்டியன், பெ. முருகேசு, நகரச் செயலாளா் எம். சுதா்ஸன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், விவசாயிகளுக்கு தேவையான யூரியா உள்ளிட்ட இடுபொருள்களைத் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும். பிரதானச் சாலையை ஒரு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சந்திரசேகர ஆசாத், ஒன்றியச் செயலாளா் இதயதுல்லாஹ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com