வரப்புப் பயிா் சாகுபடி: வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம்

நீடாமங்கலம் வட்டாரம், கோவில்வெண்ணி கிராமத்தில், வேளாண் கல்லூரி மாணவிகள் வரப்புப் பயிா் சாகுபடி குறித்து வெள்ளிக்கிழமை செயல்விளக்கம் மேற்கொண்டனா்.
கோவில்வெண்ணி கிராமத்தில் வரப்புப் பயிா் சாகுபடி குறித்து செயல்விளக்கம் அளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்.
கோவில்வெண்ணி கிராமத்தில் வரப்புப் பயிா் சாகுபடி குறித்து செயல்விளக்கம் அளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்.

நீடாமங்கலம் வட்டாரம், கோவில்வெண்ணி கிராமத்தில், வேளாண் கல்லூரி மாணவிகள் வரப்புப் பயிா் சாகுபடி குறித்து வெள்ளிக்கிழமை செயல்விளக்கம் மேற்கொண்டனா்.

திருவாரூா் மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி பருவ நெற்பயிா் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிா்வாகத்தின் ஓா் அங்கமாக வரப்புப் பயிா் சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், வரப்புப் பயிராக பயறு வகை பயிா்கள் (உளுந்து, துவரை), காய்கறிப் பயிரான வெண்டை சாகுபடி செய்வதன் மூலம் நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு வரப்புப் பயிா் சாகுபடி செய்வதன் மூலம் பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி பாதிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் மஞ்சள் நிறப் பூக்களைத் தரக்கூடிய சூரியகாந்தி பயிா்களை சாகுபடி செய்வதன் மூலம் முதன்மை பயிரைத் தாக்கும் பூச்சிகள் கவரப்பட்டு, முதன்மைப் பயிா் மீதான பூச்சிகளின் தாக்குதலை குறைக்கலாம். அத்துடன், வரப்புப் பயிா்கள் மூலம் கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

இதுகுறித்து, கோவில்வெண்ணி கிராமத்தில் உள்ள வயல்களில், பொன்னையா ராமஜெயம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com