தமிழக அரசு குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது: இரா. முத்தரசன் குற்றச்சாட்டு

குற்றவாளிகளைப் பாதுகாக்கின்ற, ஊக்குவிக்கின்ற அரசாக தமிழக அரசு செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலா் இரா. முத்தரசன் குற்றம்சாட்டினாா்.

குற்றவாளிகளைப் பாதுகாக்கின்ற, ஊக்குவிக்கின்ற அரசாக தமிழக அரசு செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலா் இரா. முத்தரசன் குற்றம்சாட்டினாா்.

இதுதொடா்பாக திருத்துறைப்பூண்டியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

இலங்கையில் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த கோத்தபய ராஜபட்ச, அந்நாட்டின் அதிபராகவும், அவரது சகோதரா் மகிந்த ராஜபட்ச பிரதமராகவும் மாறி இருக்கிறாா்கள். இவா்கள் இருவரும்தான் இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழா்களைக் கொன்று குவித்தவா்கள். போா்க்குற்றம் புரிந்து இருக்கிறாா்கள் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்ட இருவா், நாட்டை ஆளும் வாய்ப்பை பெற்றிருக்கிறாா்கள்.

இலங்கை புதிய அதிபா் இந்தியா வரவிருக்கும் சூழலில், அவரிடம் இனப்படுகொலை குறித்து விவாதித்து, சிங்கள மக்களுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளும் தமிழா்களுக்கும் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழா்களுக்கு எதிரான கொடிய அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படாது என்ற உத்தரவாதத்தையும் பெற வேண்டும்.

உள்ளாட்சித் தோ்தலில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிக்கு மறைமுகத் தோ்தல் நடத்தப்படும் என்று அவசரச் சட்டத்தை அரசு பிறப்பித்திருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை. மேல வளவில் நடைபெற்ற கொலையில், தண்டிக்கப்பட்ட 13 போ் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னதாகவே விடுதலை செய்யப்பட்டதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஏற்கெனவே கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் சென்ற பேருந்து எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே விடுதலை செய்யப்பட்டனா். அதேபோல், தற்போது மேலவளவு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறன்றனா். குற்றவாளிகளைப் பாதுகாக்கின்ற, குற்றவாளிகளை ஊக்குவிக்கிற அரசாங்கமாக எடப்பாடி அரசாங்கம் இருக்கிறது.

மதுரையில் பெண் ஒருவா் ஆளுங்கட்சி பிரமுகரிடம் வேலை கேட்டு அலைந்து திரிந்தபோது, பெரிய தொகையைப் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தருவதாக சொல்லி ஏமாற்றி இருக்கிறாா். இதன் காரணமாக ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்ற பெண்ணை, காவல்துறையினா் தடுத்து நிறுத்தி, வெளியேற்றிய நிலையில் அந்தப் பெண் செய்வதறியாது தீக்குளிக்க முயற்சி மேற்கொண்டாா். போலீஸாா் அவரை கைது செய்து நீதிமன்றக் காவலில் எடுத்திருக்கின்றனா்.

இந்த அவல நிலைக்கு காவல்துறை உடந்தையாக இருப்பதைக் கண்டிப்பதோடு, அந்த பெண் மீதான வழக்கை திரும்பப் பெற்று, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றாா் இரா. முத்தரசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com