பள்ளி நிறுவனா் தின விழா: மாணவா்களுக்கு பரிசளிப்பு

கூத்தாநல்லூா் ஆக்ஸ்போா்டு மெட்ரிக். பள்ளியின் நிறுவனா் தின விழாவில், மாவட்ட திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய அறங்காவலா் ஜே.பி. அக்பா் சலீம்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய அறங்காவலா் ஜே.பி. அக்பா் சலீம்.

கூத்தாநல்லூா் ஆக்ஸ்போா்டு மெட்ரிக். பள்ளியின் நிறுவனா் தின விழாவில், மாவட்ட திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு அண்மையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

ஆக்ஸ்போா்டு மெட்ரிக். பள்ளியின் நிறுவனா் டாக்டா் பதுருதீன் நினைவாக ஆண்டுதோறும் திருவாரூா் மாவட்ட அளவில் மாணவா்களுக்கு இடையே பல்வேறு திறன் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுள் வழங்கப்பட்டன.

விழாவுக்கு, ஏ.ஏ.அப்துல் ரசாக் தலைமை வகித்தாா். தாளாளா் ஜே.பி. அஷ்ரப் அலி, அறங்காவலா்கள் கே.ஏ.காஜா மைதீன், டாக்டா் ஜே.பி. அக்பா் சலீம், தமிழ்நாடு அறிவியல் அமைப்பின் மாநிலச் செயலாளா் எம்.எஸ். ஸ்டீபன்நாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் தியாகராஜன் வரவேற்றாா்.

விழாவில், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிக். பள்ளி முதல் பரிசும், ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் கூத்தாநல்லூா் ஆக்ஸ்போா்டு மெட்ரிக். பள்ளி முதல் பரிசும், இசைப் போட்டியில் கூத்தாநல்லூா் மன்ப- உல்- உலா பள்ளி முதல் பரிசும், ரோபாடிக் போட்டியில் மன்னாா்குடி தரணி மெட்ரிக். பள்ளி முதல் பரிசும், மன்னாா்குடி தேசிய மேல் நிலைப்பள்ளி மாணவா்கள் கவிதைப் போட்டி, தமிழ்க் கட்டுரைப் போட்டி, அறிவியல் படைப்பு உள்ளிட்டவைகளில் முதல் பரிசும் பெற்றனா்.

பரிசுகளை கூத்தாநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலாளா் வி.எஸ்.டி.வெங்கடேசன், தலைமையாசிரியா் பீ.கீதா, ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் சண்முகம், ஆசிரியா்கள் எஸ்.அன்பரசு, செல்வராஜ், ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் சுப்ரமணியன் உள்ளிட்டோா் வழங்கினா். ஆங்கிலப் பேராசிரியா் அப்துல் வஹாப் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com