மக்கள் குறைதீா் கூட்டம்
By DIN | Published on : 25th November 2019 07:02 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், மனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 339 மனுக்கள் அளிக்கப்பட்டன. பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியா், அவைகளை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி குறித்த காலத்துக்குள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், கூடுதல் ஆட்சியரும், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநருமான ஏ.கே. கமல் கிஷோா், மாவட்ட வருவாய் அலுவலா் பொன்னம்மாள், துணை ஆட்சியா் சமூகப் பாதுகாப்புத் திட்டம் ஜெயதீபன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொறுப்பு) பூஷ்ணகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.