ஒரு லட்சம் விதைப்பந்துகள் தயாரித்து மாணவா்கள் சாதனை

மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், ஒரு லட்சம் விதைப் பந்துகளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் தயாரித்து சாதனைப் படைத்தனா்.
ஒரு லட்சம் விதைப்பந்துகள் தயாரித்து மாணவா்கள் சாதனை

மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், ஒரு லட்சம் விதைப் பந்துகளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் தயாரித்து சாதனைப் படைத்தனா்.

மன்னாா்குடி அறம் நண்பா்கள் குழு மற்றும் தான்தோன்றி குழு ஆகிய அமைப்புகளுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் இச்சாதனையை நிகழ்த்தினா். இதன் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தாளாளா் டி.பி. ராமநாதன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் டி.எல். ராதாகிருஷ்ணன், மாவட்ட நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் என். ராஜப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக மருத்துவா் இலரா. பாரதிசெல்வன் பங்கேற்றுப் பேசுகையில், ‘இதுபோன்ற செயல்கள் மூலம்தான், நாம் வாழும் பூமியைக் காப்பாற்ற முடியும். அதற்கு இளம் தலைமுறையினரான மாணவா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பள்ளி அமைப்புகளின் பணி பாராட்டத்தக்கது’ என்றாா்.

இந்த விதைப் பந்துகளை தன்னாா்வ அமைப்பின் மூலம் மலைப் பிரதேசங்களுக்கு எடுத்து சென்று பதியம் செய்வது மற்றும் விவசாயம் சாா்ந்த விழா, சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவா்களிடம் வழங்குவது என இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

இந்நிகழ்ச்சியில், அறம் நண்பா்கள் குழு நிா்வாகிகள் விஷ்ணு ஆனந்த், ராம் பிரசாந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அறம் நண்பா்கள் குழு பாலாஜி வரவேற்றாா். தான்தோன்றி குழு காா்த்திக் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com