முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
நூலகத்தில் வாசக சாலை கலந்துரையாடல்
By DIN | Published On : 26th November 2019 09:40 AM | Last Updated : 26th November 2019 09:40 AM | அ+அ அ- |

திருவாரூா் மைய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
திருவாரூா் மாவட்ட மைய நூலகத்தில் வாசகசாலையின் 19-ஆவது கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கலந்துரையாடலுக்கு எழுத்தாளா் ஏ.கே. செட்டியாரின் உலகம் சுற்றும் தமிழன் கட்டுரைத் தொகுப்பு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், மத்தியப் பல்கலைக்கழக முனைவா் பட்ட ஆய்வாளா் வினோதா பங்கேற்று, புத்தகம் பற்றி வாசக பாா்வையில் பேசினாா். செம்மங்குடி அரசு உதவிப்பெரும் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியா் மதிவாணன், புத்தகம் குறித்து விளக்கிப் பேசினாா். இலக்கிய வளா்ச்சிக்கழகத் தலைவா் எண்கண் மணி, குடவாசல் எம்.ஜி.ஆா் கல்லூரி முதல்வா் ஜான் பீட்டா், பேராசிரியா் நடராஜன், நூலகா் ஆசைத்தம்பி மற்றும் மத்தியப் பல்கலைக்கழக மாணவா்கள் பங்கேற்றனா். திருவாரூா் வாசகசாலை ஒருங்கிணைப்பாளா் நரேன் கிருஷ்ணா நிகழ்வை ஒருங்கிணைத்தாா்.