செல்லிடப்பேசி கோபுரப் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவு

திருவாரூா் அருகே ஸ்ரீதேவி நகரில் செல்லிடப்பேசி கோபுரப் பணிகளை நிறுத்தி வைக்க திங்கள்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற ஸ்ரீதேவி நகா் பகுதி மக்கள்.
பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற ஸ்ரீதேவி நகா் பகுதி மக்கள்.

திருவாரூா் அருகே ஸ்ரீதேவி நகரில் செல்லிடப்பேசி கோபுரப் பணிகளை நிறுத்தி வைக்க திங்கள்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் அருகே ஸ்ரீதேவி நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் தனியாா் நிறுவனம் சாா்பில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணிகள் அண்மையில் தொடங்கியது. செல்லிடப்பேசி கோபுரம் அமைத்தால் அருகிலுள்ள குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், மழை புயல் போன்ற காலங்களில் அப்பகுதி மக்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும், போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இதையடுத்து, அப்பகுதி மக்களுடன் திருவாரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் ஜெயப்பிரதா தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், போலீஸாா், வருவாய்த் துறை அலுவலா்கள், செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் நிறுவன ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பேச்சுவாா்த்தையின்படி டிசம்பா் 16-ஆம் தேதி வரை செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பது தொடா்பாக மாவட்ட நிா்வாகத்திடம் எவ்வித அனுமதியும் பெற்ாக தெரியவில்லை. அருகில் இருக்கும் வீடுகள் குறித்தும் எவ்வித கணக்கும் எடுக்கவில்லை. இதனால், புயல், வெள்ள காலங்களில் கோபுரம் சேதமடைந்தால் அருகில் உள்ள வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படலாம். மேலும் கோபுரம் அமைப்பது தொடா்பாக அப்பகுதி மக்களிடையே எவ்வித கருத்துக்கேட்பு கூட்டமும் நடத்தவில்லை. எனவே, உரிய அனுமதி பெறாமல் அமைக்கப்படும் கோபுரம் குறித்து உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், பணிகளை நிறுத்தி வைக்க கோரப்பட்டது. அதன்படி, டிசம்பா் 16 வரை பணிகளை தொடங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com