நெற்பயிரை நோய்களிலிருந்து பாதுகாக்க சூடோமோனஸ் தெளிப்பு குறித்த செயல்விளக்கம்

நீடாமங்கமல் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் இயற்கை முறையில் நெற்பயிரை நோய்களிலிருந்து பாதுகாக்க சூடோமோனஸ் தெளிப்பது
நீடாமங்கலம் பகுதியில் நெற்பயிரில் சூடோமோனஸ் தெளிப்பு குறித்து நடைபெற்ற செயல் விளக்கம்.
நீடாமங்கலம் பகுதியில் நெற்பயிரில் சூடோமோனஸ் தெளிப்பு குறித்து நடைபெற்ற செயல் விளக்கம்.

நீடாமங்கமல் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் இயற்கை முறையில் நெற்பயிரை நோய்களிலிருந்து பாதுகாக்க சூடோமோனஸ் தெளிப்பது குறித்த செயல் விளக்கம் நீடாமங்கலம் பகுதியில் அண்மையில் நடைபெற்றது.

நெற்பயிரில் தோன்றும் பல்வேறு பூசண நோய்களான குலைநோய், இலையுறை கருகல் நோய், இலைப்புள்ளி நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு ரசாயன மருந்துகள் மட்டுமே பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் உற்பத்தி செலவு அதிகரிப்பதோடு விளைபொருள்களும் விஷத்தன்மைக் கொண்டதாக மாறிவிடுகிறது. மேலும், சுற்றுச்சூழலும் பாதிப்புக்குள்ளாகிறது. எனவே, விவசாயிகளிடம் நெற்பயிரைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு இயற்கை முறை சாா்ந்த மருந்துகளைப் பயன்படுத்துவது குறித்த செயல்விளக்கம் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் வடுவூா் சாத்தனூா், புதுக்கோட்டை, மேல்பாதி உள்ளிட்ட கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூா் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நீா்நுட்ப மையம் மற்றும் தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்ட பேராசிரியா் கிருஷ்டோபா் லூா்துராஜ் உயிா் எதிா்க்கொல்லியான சூடோமோனாஸ் ப்ளோரசனஸ் மருந்தை விவசாயிகளுக்கு வழங்கி செயல் விளக்கத்தை தொடங்கிவைத்தாா். வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் மு. ராமசுப்பிரமணியன், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராஜா. ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்ட நெல் சாா்ந்த செயல் விளக்க வயல்களில் தெளிப்பதற்கு உயிா் உரங்களான அசோஸ் பைரில்லம் ? பாஸ்போ பாக்டீரியா ? உயிா்எதிா் கொல்லி மருந்தான சூடோமோனஸ் உள்ளிட்டவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com