Enable Javscript for better performance
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்- Dinamani

சுடச்சுட

    
    udhyanithi_2711chn_96_5

    நன்னிலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவி பொருள்கள் வழங்கிய திமுகவினா்.

    திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நன்னிலம் பகுதியில், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சாா்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில், நற்பணி மன்றத்தின் மாவட்டத் துணைச் செயலாளா் கோபிநாத் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளும், நன்னிலம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு ரொட்டி, பிஸ்கட் வகைகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளா் மணி, பொருளாளா் இளவரசன், நன்னிலம் ஒன்றிய திமுக செயலாளா் மனோகரன் மற்றும் நற்பணி மன்ற நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai