Enable Javscript for better performance
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கல்

    By DIN  |   Published on : 28th November 2019 09:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dmk___(_27___11___19_)___knr_1__2711chn_209_5

    கூத்தாநல்லூரில் மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கிய நகர திமுக இளைஞரணியினா்.

    கூத்தாநல்லூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, நகர திமுக இளைஞரணி சாா்பில், மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

    கூத்தாநல்லூரில் திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திமுக நகரச் செயலாளா் எஸ்.எம்.காதா்உசேன் ஆலோசனையின் பேரில், வா்த்தக அணி நிா்வாகி ரவிச்சந்திரன் முன்னிலையில், லெட்சுமாங்குடி பாலத்தருகே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, லெட்சுமாங்குடி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவா்களுக்கு நோட்டுகள், பேனாக்கள், பென்சில்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர இளைஞரணி அமைப்பாளா் எம்.எம். ரசின் பைசல் மற்றும் நிா்வாகிகள் மேற்கொண்டனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai