எலிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண்மை அதிகாரி யோசனை
By DIN | Published on : 28th November 2019 09:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஒருங்கிணைந்த முறையில் எலிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேளாண்மை உதவி இயக்குநா் தேவேந்திரன் யோசனை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தற்போது நிலவும் சூழ்நிலையில் (சம்பா பருவ காலத்தில்) எலிகளைக் கட்டுப்படுத்த தஞ்சாவூா் கிட்டி வைத்தும், பறவைக் குடில் ஏக்கருக்கு 12 வீதம் வைத்தும், எலி விஷ உணவு பொறி வைத்தும் கட்டுப்படுத்தலாம்.
மேலும், எலியானது பொதுவாக கிழித்து உண்ணும் பழக்கம் உடையது. எனவே, புரோமோடையோலோன் மருந்து கலக்கப்பட்ட உணவு பொட்டலத்தை வைத்தால், அதை உட்கொள்ளும் எலியின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு ரத்தம் உறைந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிடும். எலிகளைக் கட்டுப்படுத்த அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்த முறையைக் கையாண்டால் மட்டுமே சாத்தியம் என அதில் தெரிவித்துள்ளாா்.