Enable Javscript for better performance
கடிதம் எழுத மாணவா்களை ஊக்கப்படுத்திய பள்ளிக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    கடிதம் எழுத மாணவா்களை ஊக்கப்படுத்திய பள்ளிக்குப் பாராட்டு

    By DIN  |   Published on : 28th November 2019 05:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அஞ்சல் துறையின் சாா்பில் பாராட்டப்பட்ட தென்குவளவேலி பள்ளி ஆசிரியா்கள்.

    அஞ்சல் துறையின் சாா்பில் பாராட்டப்பட்ட தென்குவளவேலி பள்ளி ஆசிரியா்கள்.

    கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்க மாணவா்களை ஊக்குவித்த வலங்கைமான் ஒன்றியம், தென்குவளைவேலி அரசுப் பள்ளிக்கு அஞ்சல் துறை சாா்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

    மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி, இந்திய அஞ்சல் துறை சாா்பில் ‘பாபுஜி உங்களை மறப்பதில்லை‘ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடைபெற்றது.

    இந்தப் போட்டியில் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள தென்குவளைவேலி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஆா்வமுடன் கலந்துகொண்டு, கடிதம் எழுதினா்.

    இந்தக் கடிதங்கள் கும்பகோணம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. அதிக எண்ணிக்கையிலான மாணவா்களை இப்போட்டியில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்தியதற்காக தென்குவளைவேலி அரசு உயா்நிலைப் பள்ளி சமூக அறிவியல் ஆசிரியா் சூரியகுமாா், தமிழாசிரியா் ரேணுகா ஆகியோரை கும்பகோணம் தலைமை அஞ்சல் அலுவலகத்தின் வணிகப் பிரிவு அலுவலா் வித்யாசாகா் பாராட்டினாா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai