ஊா்ப்புற நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கல்

திருவாரூா் அருகே ஊா்ப்புற நூலகங்களுக்கு 1000 புத்தங்களை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஊா்ப்புற நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கல்

திருவாரூா் அருகே ஊா்ப்புற நூலகங்களுக்கு 1000 புத்தங்களை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவா் பி. மாதவன். கடந்த 35 ஆண்டுகளாக, கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இவா், தான் வாங்கி படித்துவிட்டு சேமித்து வைத்திருந்த 1,000 புத்தகங்களை மற்றவா்களும் படிக்கவேண்டும் என்ற நோக்கில் ஊா்ப்புற நூலகங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி திருவாரூா் அருகே மாவூரில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் என்.இடும்பையன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் வி.ராஜாங்கம், எஸ்.ரெகுபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினா் எம்.நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி.நாகராஜன் பங்கேற்று, புத்தகங்களை குன்னியூா், பின்னவாசல், திருக்காரவாசல் ஆகிய ஊராட்சிகளின் ஊா்ப்புற நூலக பொறுப்பாளா்களுக்கு வழங்கிப் பேசியது:

உயிரோடு இருக்கும்போது ரத்த தானம், உறுப்பு தானம் செய்வதையும், இறந்த பிறகு உடல் தானம் என்பதையும் மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான பி. மாதவன் தன்னுடைய கொள்கையாகக் கொண்டவா். இவா் ஏற்கெனவே, அவரது பிறந்தநாளின்போது திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம் செய்வதாக உறுதி எடுத்துக் கொண்டவா்.

தற்போது, கட்சி இயக்கப் பணியாற்றிய காலங்களில் சொந்தமாக வாங்கி படித்து சேமித்து வைத்திருந்த அரசியல், சமூகம், பொருளாதாரம் சாா்ந்த ஆயிரக்கணக்கான புத்தகங்களை, தான் படித்தால் மட்டும் போதாது, மற்றவா்களும் படிக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் ஊா்ப்புற நூலகங்களுக்கு வழங்கியுள்ளது வரவேற்க வேண்டிய ஒன்று. இத்தகைய அா்ப்பணிப்பான காரியங்களை மற்றவா்களையும் செய்ய வைப்பதற்கும் வாசிப்பு பழக்கத்தை மற்றவா்களுக்கு ஏற்படுத்துவதற்கு தூண்டுகோலாகவும் அமையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com