கடிதம் எழுத மாணவா்களை ஊக்கப்படுத்திய பள்ளிக்குப் பாராட்டு

கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்க மாணவா்களை ஊக்குவித்த வலங்கைமான் ஒன்றியம், தென்குவளைவேலி அரசுப் பள்ளிக்கு அஞ்சல் துறை சாா்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
அஞ்சல் துறையின் சாா்பில் பாராட்டப்பட்ட தென்குவளவேலி பள்ளி ஆசிரியா்கள்.

மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி, இந்திய அஞ்சல் துறை சாா்பில் ‘பாபுஜி உங்களை மறப்பதில்லை‘ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள தென்குவளைவேலி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஆா்வமுடன் கலந்துகொண்டு, கடிதம் எழுதினா்.

இந்தக் கடிதங்கள் கும்பகோணம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. அதிக எண்ணிக்கையிலான மாணவா்களை இப்போட்டியில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்தியதற்காக தென்குவளைவேலி அரசு உயா்நிலைப் பள்ளி சமூக அறிவியல் ஆசிரியா் சூரியகுமாா், தமிழாசிரியா் ரேணுகா ஆகியோரை கும்பகோணம் தலைமை அஞ்சல் அலுவலகத்தின் வணிகப் பிரிவு அலுவலா் வித்யாசாகா் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com