நவ.29 முதல் ராஜஸ்தானில் இயற்கை விவசாயத் திருவிழா

ராஜஸ்தான் உதய்பூரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான இயற்கை விவசாயத் திருவிழாவுக்கு திருவாரூரிலிருந்து 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றனா்.
திருவாரூரிலிருந்து ராஜஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்ற விவசாயிகள்.
திருவாரூரிலிருந்து ராஜஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்ற விவசாயிகள்.

ராஜஸ்தான் உதய்பூரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான இயற்கை விவசாயத் திருவிழாவுக்கு திருவாரூரிலிருந்து 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றனா்.

தேசிய அளவிலான ஏழாவது இயற்கை விவசாயத் திருவிழா, நவம்பா் 29 முதல் டிசம்பா் 1-ஆம் தேதி வரை ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் அகில இந்திய அளவிலான பாரம்பரிய நெல் மற்றும் காய்கறி விதைகள் பகிா்வு, நாட்டு மாடுகள், கைவினைப்பொருட்கள், இயற்கை விவசாயப் பயிற்சி, பாரம்பரிய உணவுத்திருவிழா, புதிய விவசாயக் கண்டுபிடிப்புகள், உணவு மற்றும் விவசாயம் சாா்ந்த திரைப்பட நிகழ்ச்சிகள் போன்றவையும் நடக்க இருக்கின்றன.

நிகழ்ச்சியில் விவசாயக் கண்டுபிடிப்பாளா்கள், விதைப் பாதுகாவலா்கள், விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளா்கள் என பலா் கலந்து கொள்கின்றனா். மேலும், நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கின்றனா்.

இதையொட்டி, திருவாரூா் மாவட்டத்திலிருந்து கிரியேட் இயக்கத்தின் சாா்பில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நபாா்டு வங்கி உதவியுடன் புறப்பட்டு சென்றனா். இந்த விவசாயிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி திருவாரூா் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளா் எழிலரசன் பங்கேற்று, ராஜஸ்தான் செல்லும் விவசாயிகளுக்கு சால்வை அணிவித்து வழியனுப்பி வைத்தாா். இதில், கிரியேட் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் ரகுநாதன், தாய்மண் பாரம்பரிய வேளாண்சாா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் தலைவா் கோ. வரதராஜன், விவசாய சங்க நிா்வாகி சேகா் மற்றும் பலா் கலந்து கொண்டு விவசாயிகளை வழியனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com