பயிா்க் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது நெற்பயிா்களைக் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது நெற்பயிா்களைக் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விவசாயிகளுக்கு எதிா்பாராமல் ஏற்படும் பயிா் இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்களைக் காப்பீடு செய்து கொள்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் கடன் பெறும் விவசாயிகள் அவா்கள் கடன்பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிா்க் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவா்.

கடன் பெறாத விவசாயிகள், பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான கடைசி தேதி நவம்பா் 30. இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து விவசாயிகளும் தங்களது பயிா்களை உடனடியாக காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

ஏக்கருக்கு பயிா்க் காப்பீடு பிரீமிய தொகை ரூ.465. மேலும் விண்ணப்பதுடன் கிராம நிா்வாக அலுவலா் மூலம் பெறப்பட்ட அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் போன்றவற்றை இணைத்து கட்டணத் தொகை ரசீதுடன் விண்ணப்பிக்கலாம். அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com