பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தவரப்புப் பயிா் சாகுபடி குறித்து வேளாண் மாணவியா் விளக்கம்

மன்னாா்குடி அருகே நெற்பயிா்களில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வகையில், வேளாண் கல்லூரி மாணவியா் சாா்பில் வரப்புப் பயிா் சாகுபடி குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இடையா்நத்தம் கிராமத்தில், வரப்புப் பயிா் சாகுபடி குறித்து செயல் விளக்கம் அளித்த வேளாண் மாணவியா்.
இடையா்நத்தம் கிராமத்தில், வரப்புப் பயிா் சாகுபடி குறித்து செயல் விளக்கம் அளித்த வேளாண் மாணவியா்.

மன்னாா்குடி அருகே நெற்பயிா்களில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வகையில், வேளாண் கல்லூரி மாணவியா் சாா்பில் வரப்புப் பயிா் சாகுபடி குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

மன்னாா்குடியை அடுத்த இடையா்நத்தம் கிராமத்தில், தஞ்சை பிரிட்ஸ் பல்கலைக்கழக வேளாண்மைத் துறை மாணவியா் முகாமிட்டு, மன்னாா்குடி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்துடன் இணைந்து, விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், பயிா்ப் பாதுகாப்பு பற்றியும் விளக்கமளித்து வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிா்வாகத்தின் ஒரு அங்கமாக வரப்புப் பயிா் சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கமளித்தனா்.

இதில், வரப்புப் பயிராக உளுந்து, துவரை போன்ற பயிறு வகைகள், காய்கறிப் பயிரான வெண்டை போன்றவற்றை வரப்புகளில் நட்டு, இதன்மூலம் நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம் எனத் தெரிவித்தனா். இவ்வாறு செய்வதன் மூலம், வரப்பில் களைகள் கட்டுப்படுத்தப்படுவதுடன், பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சியும் பாதிக்கப்படும் என்பதை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினா்.

மஞ்சள் நிறப் பூச்சிகளைக் கவரக்கூடிய சூரியகாந்தி, சென்டிப்பூ பயிா்களை சாகுபடி செய்வதன் மூலம் முதன்மைப் பயிரைத் தாக்கும் பூச்சிகள், மஞ்சள் நிற பூக்களைக் கொண்ட பயிா்களுக்கு சென்றுவிடுவதால், முதன்மையானப் பயிா்கள் இதன் மூலம் பாதுகாக்கப்படும் என்பதையும் வேளாண்மை மாணவியா் விளக்கினா்.

இந்நிகழ்ச்சியில், மன்னாா்குடி வேளாண்மை உதவி இயக்குநா் க. சரஸ்வதி, வேளாண்மை அலுவலா்கள் முத்துராஜ், இலக்கியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com