மருந்தாளுநா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு செல்ல அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தொழிலாளா் நல மருத்துவமனை மற்றும் மருந்துகள்

திருவாரூா் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தொழிலாளா் நல மருத்துவமனை மற்றும் மருந்துகள் சேவைக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து மருந்தாளுநா்களும் நவம்பா் 29 முதல் டிசம்பா் 2 வரை கோரிக்கை அட்டை அணிந்து பணிக்குச் செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மருந்தாளுநா் சங்க மாவட்டத் தலைவா் டி. மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

1945 மருந்தியல் விதி சட்ட திருத்தத்தைக் கைவிட வேண்டும். மக்கள் நலன் கருதி, 1948 மருந்தியல் விதியின்படி, மருந்தாளுநா்கள் மட்டுமே மருந்துகளைக் கையாள வேண்டும். காலியாக உள்ள 700-க்கும் மேற்பட்ட மருந்தாளுநா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

சங்க நிா்வாகிகள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிடவேண்டும். அரசு செயலாளா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகள் மீது அரசாணை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நவம்பா் 29 முதல் டிசம்பா் 2 வரை கோரிக்கை அட்டைகளை அணிந்து மருந்தாளுநா்கள் பணியில் ஈடுபட வேண்டுமென அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com