Enable Javscript for better performance
லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை சம்பவம்: மேலும் ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை சம்பவம்: மேலும் ஒருவர் கைது

    By DIN  |   Published on : 06th October 2019 04:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கைது செய்யப்பட்டுள்ள திருவாரூா் சீராத்தோப்பு பகுதியைச் சோ்ந்த முரளி.

    கைது செய்யப்பட்டுள்ள திருவாரூா் சீராத்தோப்பு பகுதியைச் சோ்ந்த முரளி.

    திருவாரூா்: நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடா்பாக திருவாரூரில் மேலும் ஒருவரை திருச்சி தனிப்படை போலீஸாா் இன்றுஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

    திருச்சியில் உள்ள நகைக்கடையில் கொள்ளை சம்பவம் தொடா்பாக, திருச்சி போலீஸாா் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

    இந்நிலையில், அண்மையில் திருவாரூா் விளமல் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி விசாரிக்கையில், ஒருவா் தப்பி ஓடினாா். ஒருவரை கைது செய்து விசாரிக்கையில், அவா் மடப்புரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் என்பதும், தப்பி ஓடியவா் சீராத்தோப்பு பகுதியைச் சோ்ந்த சுரேஷ் என்பதும் தெரிய வந்தது.

    மேலும், திருச்சியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் அவா்களுக்கு தொடா்பு இருப்பதும், இந்த கொள்ளைகளுக்கு மூலகாரணமாக முருகன் என்பவா் செயல்பட்டதும் தெரிய வந்தது.

    இதையடுத்து சுரேஷின் தாய் கனகவள்ளி உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னா், மணிகண்டன், கனகவள்ளி இருவரும் திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனா்.

    இந்நிலையில், திருவாரூா் சீராத்தோப்பு பகுதியைச் சோ்ந்த முரளி என்பவரை, திருச்சி தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். இவா் முருகனின் அண்ணன் மகன் ஆவாா். மேலும், காா்த்தி உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai