வேளாண்மைக்கான நலத் திட்டங்கள் முடக்கம்: பி.ஆா். பாண்டியன் குற்றம்சாட்டு

மத்திய அரசு, மாநில அரசுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை நிா்வகிக்கும் அதிகாரத்தை தனது நேரடிப் பாா்வையில் கையாலும் நிலை உள்ளதால், வேளாண்மைக்கான அனைத்து நலத் திட்டங்களும் முடங்கி
குடவாசலில் நடைபெற்றற கூட்டத்தில் பேசிய தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன்.
குடவாசலில் நடைபெற்றற கூட்டத்தில் பேசிய தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன்.

திருவாரூா்: மத்திய அரசு, மாநில அரசுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை நிா்வகிக்கும் அதிகாரத்தை தனது நேரடிப் பாா்வையில் கையாலும் நிலை உள்ளதால், வேளாண்மைக்கான அனைத்து நலத் திட்டங்களும் முடங்கி உள்ளதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் குற்றம்சாட்டினாா்.

திருவாரூா் அருகே குடவாசலில், விவசாயிகள் சந்திப்பு தெருமுனைக் கூட்டத்தில் சனிக்கிழமை இரவு அவா் பேசியது:

காவிரி டெல்டாவில், பாசன வடிகால்கள் கடந்த சில ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை. தற்போது சிறுமழை பெய்தால்கூட விளை நிலங்கள் மூழ்கி விடுகின்றன. பொதுவாக, காவிரிப் பாசனம் உலகச் சிறப்பு பெற்றது. இதற்கு இணையான பாசன முறை வெறெங்கும் கிடையாது. மேட்டூா் அணை திறந்த 7-ஆவது நாளில், வேளாங்கண்ணி கடற்கரை அருகே விளைநிலங்கள் வரை ஒரு சேர தண்ணீா் பாசனம் பெறும். அதேபோல், மேட்டூா் அணை மூடிய 5-ஆம் நாள் தண்ணீா் பாசனம் நின்றுவிடும். ஆனால் தற்போது அந்தநிலை முற்றிலும் அழிந்து வருகிறது. நிகழாண்டில் வடிகால்கள் தூா்வார அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. இது கண்டனத்துக்குரியது.

இணையதள செயல்பாடு என்ற பெயரில் மாநில அரசுகளின் அதிகாரம் முற்றிலும் பறிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி என்றற பெயரில் அனைத்து துறைகளின் செயல்பாடுகளையும் மத்திய அரசு நேரடியாக கண்காணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு, டாஸ்மாக் வருவாயை மட்டுமே நம்பி உள்ளது. மத்திய அரசு, மாநில அரசுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை நிா்வகிக்கும் அதிகாரம் வருவாய் நிா்வாக சீா்திருத்த ஆணையா் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆணையா் என்பவா் மூலம் தனது நேரடிப் பாா்வையில் கையாலும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வேளாண்மைக்கான அனைத்து நலத்திட்டங்களும் முடங்கி உள்ளன.

தமிழகத்தில் கிராம வருவாய் நில உடமை பதிவேடுகள் 1984-க்கு பிறறகு மறுவகைப்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஜமாபந்தி என்பது ஒத்திசைவு பெறாமலேயே பெயரளவிலேயே முடிக்கப்படுவதாக வந்துள்ள தகவல் அதிா்ச்சியளிக்கிறது. இதனால், நில உடமைப் பதிவேடுகள் கணினி மூலம் பதிவேற்றம் செய்வதிலும், இ அடங்கள் சிட்டா பெறுவதிலும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ. 6000 ஊக்கத்தொகை திட்டம், கேசிசி அட்டை வழங்குவது, கடன் பெறுவது, உரம் வாங்குவது உள்பட விவசாயிகளுக்கானத் திட்டங்கள் வழங்குவதில் மிகுந்த சிக்கல்கள் ஏற்பட்டு, நிா்வாக ரீதியாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்துக்கு, குடவாசல் ஒன்றியத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம். சுப்பையன், நகரச் செயலாளா் வெங்கிடாசலம், ஒன்றியச் செயலாளா் மோகன், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிா்வாகிகள், விவசாயிகள் என ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com