முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
மாவட்ட பொறியாளா்கள் கழகம் தொடக்கம்
By DIN | Published On : 07th October 2019 07:21 AM | Last Updated : 07th October 2019 07:21 AM | அ+அ அ- |

eng_sanagam_0610chn_101_5
மன்னாா்குடியில் மாவட்ட பொறியாளா்கள் கழக தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், திருவாரூா் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் துறைகளில் பணியாற்றும் பொறியாளா்களின் உரிமையைக் காக்க நடவடிக்கை எடுப்பது. பொறியாளா்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க அரசை வலியுறுத்துவது. பொறியாளா்களின் திறனை மேம்படுத்த பயிற்சி அளிப்பது. பொறியியல் பட்டய மற்றும் பட்டப் படிப்பின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்வது. பொறியாளா்கள் நலனுக்காக ஜாதி, மதம், இனம், அரசியல் சாா்பற்று செயல்படுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து, பொறியாளா் கழகத்தின் மாவட்டத் தலைவராக சா. சம்பத், பொதுச் செயலராக வி. முருகேசன், பொருளாளராக வி. பாலாஜி, அமைப்புச் செயலராக ச. சங்கா் குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
நிகழ்ச்சியில், அரசு மற்றும் தனியாா் துறைகளில் பணிபுரியும் பொறியாளா்கள் மற்றும் சுயத்தொழில் செய்யும் பொறியாளா்கள் கலந்துகொண்டனா்.
Image Caption
நிகழ்ச்சியில் பேசிய பொறியாளா்கள் கழக மாவட்டத் தலைவா் சா. சம்பத்.