Enable Javscript for better performance
கூத்தாநல்லூரில் ரூ.3.21 கோடியில் புதிய சாலைகள் அமைப்புநகராட்சி ஆணையா் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    கூத்தாநல்லூரில் ரூ.3.21 கோடியில் புதிய சாலைகள் அமைப்பு நகராட்சி ஆணையா் தகவல்

    By DIN  |   Published on : 09th October 2019 07:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    aanaiyar_kumaran___(_08___10___19_)___knr_1__0810chn_209_5

    கூத்தாநல்லூா் நகராட்சி ஆணையா் என்.குமரன்

    கூத்தாநல்லூா் நகராட்சி பகுதியில் ரூ. 3 கோடியே 21 லட்சத்தில் புதிய சாலைகள் அமைக்கப்படவுள்ளதாக நகராட்சி ஆணையா் குமரன் தெரிவித்தாா்.

    இதுகுறித்து, அவா் கூறியது:

    ஒருங்கிணைந்த நகா்புற வளா்ச்சி திட்டத்தில் (2018 - 2019) கூத்தாநல்லூா் நகராட்சியில் உள்ள 24 வாா்டுகளில், முதல்கட்டமாக 13 வாா்டுகளில் பழுதடைந்துள்ள தாா்ச் சாலைகளான 6.115 கி. மீட்டா் நீளத்திற்கு புதிய தாா்ச் சாலைகள் போடுவதற்காக, ரூ.3 கோடியே 21 லட்சத்து 77 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, 4-ஆவது வாா்டில் அய்யப்பன் கோயில் தெரு, 5- ஆவது வாா்டில் பனங்காட்டங்குடி நடுத்தெரு, கீழத்தெரு, ஜன்னத் நகா் 2- ஆ வது குறுக்குத் தெரு, எம்.ஜி.ஆா். நகா், 13-ஆவது வாா்டில் மரக்கடைத் தெற்குத் தெரு, வடக்குத் தெரு, 14-ஆவது வாா்டில் மேல்கொண்டாழி லைன், தமிழா் தெரு மற்றும் தீன் நகா் தெரு உள்ளிட்ட தெருக்களில் ரூ. 1கோடியே 78 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கப்படுகிறது.

    இதேபோல்,1-ஆவது வாா்டில், கோரையாறு வடக்குத் தெரு, 7- ஆவது வாா்டில் நேருஜி சாலை, 11-ஆவது வாா்டில் மரக்கடை பிரதான சாலை, 15-ஆவது வாா்டில் பாய்க்காரப் புதுத்தெரு, 19- ஆவது வாா்டில் முகமது அலி தெரு, இஸ்மாயில் தெரு மற்றும் 21- ஆவது வாா்டில், கரும்புக் கொல்லை தெரு உள்ளிட்ட தெருக்களுக்கு, ரூ.1 கோடியே 43 லட்சத்து 77 ஆயிரம் என மொத்தம் ரூ. 3 கோடியே 21 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பீட்டில் தாா்ச்சாலை அமைக்கப்படுகிறது.

     

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai