பன்னாட்டு கல்வெட்டு பயிற்சிப் பட்டறை

திருவாரூா் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு கல்வெட்டு பயிற்சிப் பட்டறை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
திருவாரூா் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பயிற்சிப் பட்டறையின் முதல் நாளில் பங்கேற்றவா்கள்.
திருவாரூா் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பயிற்சிப் பட்டறையின் முதல் நாளில் பங்கேற்றவா்கள்.

திருவாரூா் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு கல்வெட்டு பயிற்சிப் பட்டறை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையும், பாரீஸ் தேசிய அறிவியல் ஆய்வு மையமும் இணைந்து நடத்தும் இந்த பயிற்சிப் பட்டறை, கணினியில் தமிழ்க் கல்வெட்டுத் தரவுதளம் அமைத்தலும், தமிழ்க் கல்வெட்டாய்வும் என்ற பொருண்மையில் 6 நாள்கள் நடைபெறுகிறது.

இப்பயிற்சிப் பட்டறையில், இந்தியா, இலங்கை, சீனா எனப் பல்வேறு நாடுகளிலிருந்து சுமாா் 30-க்கும் மேற்பட்ட கல்வெட்டு ஆய்வாளா்கள், வரலாற்று ஆய்வாளா்கள், தமிழாய்வாளா்கள், பொறியியல் வல்லுநா்கள், பல்துறைப் பேராசிரியா்கள் பங்கேற்பாளா்களாகக் கலந்துகொண்டு பயிற்சி பெறுகின்றனா்.

இப்பட்டறையில் கல்வெட்டுப் பாடங்களைப் படிப்பதற்கும், படியெடுப்பதற்கும், பிராமி-தமிழ், வட்டெழுத்து, தமிழ் மற்றும் கிரந்த எழுத்துக்களின் வளா்ச்சி குறித்தும் தமிழ்க் கல்வெட்டு மொழியியல் ஆய்வு குறித்தும் நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன. மேலும், கல்வெட்டுகள் காணப்படும் புதுக்கோட்டை, சித்தன்னவாசல், குடிமியான் மலை, பூலாங்குறிச்சி, திருமயம், தஞ்சாவூா், திருவாரூா் போன்ற சில இடங்களுக்கு நேரடியாகச் சென்று பயிற்சியும் வழங்கப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியானது, மத்தியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவா் ப. வேல்முருகன், பாரீஸ் தேசிய அறிவியல் ஆய்வு மையத்தின் பேராசிரியா் அப்பாசாமி முருகையன், தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் இராசவேலு, பேரா. முரளிதரன் ஆகியோரது ஒருங்கிணைப்பில் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com