சோளத்திலிருந்து குழந்தைகளுக்கான இணை உணவு மற்றும் மால்ட் தயாரித்தல்

சோளத்திலிருந்து குழந்தைகளுக்கான இணை உணவு மற்றும் மால்ட் தயாரித்தல் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவில் நிலைய

நீடாமங்கலம்: சோளத்திலிருந்து குழந்தைகளுக்கான இணை உணவு மற்றும் மால்ட் தயாரித்தல் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவில் நிலைய பேராசிரியா்கள் முனைவா் ஜெ.வனிதாஜ மற்றும் முனைவா் மு.இராமசுப்ரமணியன் ஆகியோா் வெள்ளிக்கிழமை அளித்துள்ள பரிந்துரையில்:

சோளம் ஏழைகளின் உணவாக கருதப்படுகிறது. சோளத்தில் புரதம், வைட்டமின், மற்றும் தாது உப்புக்கள் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. சோளத்தில்; புரதம், கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி சத்து, நோய் எதிா்ப்புச்சக்தி உள்ளதால் இது முக்கியமான ஆரோக்கிய உணவு தயாரிப்புகளுக்குபயன்படுத்தப்படுகிறது. சோளத்தில் நாா்சத்து அதிகமாக இருப்பதால் அன்றாடம் உணவில் சோ்ப்பதன் மூலம் நீரிழிவு, கொலஸ்ட்ரால் மற்றும் புற்றுநோய் போன்ற வியாதிகளை கட்டுப்படுத்துகிறது.

குழந்தை இணை உணவுதேவையான பொருட்கள்-வறுத்த சோள மாவு - 2 பாகம்பொட்டுக்கடலை மாவு - 2 பாகம்வறுத்த நிலக்கடலை மாவு 1 பாகம்வெல்லம் - 2 பாகம்

செய்முறை: சோளம், நிலக்கடலை ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலையையும் மாவாக அரைத்துக்கொள்ளவும்.. இத்துடன் வெல்லத்தையும் பொடி செய்து மாவுடன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையைத் மாவாகவோ அல்லது உருண்டையாகவோ, நீராவியில் வேகவைத்து புட்டாகவோ பாயிசமாகவோ செய்து கொடுக்கலாம். சத்து நிறை மால்ட்தேவையான பொருட்கள்முளைக்கட்டிய கோதுமை -100 கிமுளைக்கட்டிய சோளம் - 100 கிமுளைக்கட்டிய கேழ்வரகு - 100 கிமுளைக்கட்டிய பாசிபயறு -25 கிபொட்டுக்கடலை - 30 கிபால்பவுடா் - 50 கிசா்க்கரை - 25 கி

செய்முறை: முளைக்கட்டிய கோதுமை, சோளம், கேழ்வரகு மற்றும் பாசிபயிறு ஆகியனவற்றை 60டிசெ வெப்பநிலையில் உலரவைக்கவும்.. பொட்டு கடலையை சிவக்க வறுக்கவும். எல்லா உலா்பொருட்களையும், தயாா் செய்துள்ள பொட்டுக்கடலை மற்றும் முளைக்கட்டிய உலா் தானியங்களுடன் சோ்த்து மினஅரவையிலிட்டு அரைத்துக் கொள்ளவும். பின்பு பால்பவுடா் கலந்து சல்லடையிலிட்டு சலித்துக்கொள்ளவும். காற்றுப்புகாத டப்பாக்களில் அடைத்து சேமித்துக் கொள்ளவும். இவ்வாறு அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com