பிபி கவா் மீதான தடை: மறுபரிசீலனை செய்ய வா்த்தக சங்கத்தினா் மனு

பிபி கவா் மீதான தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிபி கவா் மீதான தடை: மறுபரிசீலனை செய்ய வா்த்தக சங்கத்தினா் மனு

பிபி கவா் மீதான தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் விஜயபுரம் வா்த்தகா் சங்கத்தினா், மாவட்ட ஆட்சியா் த. ஆனந்திடம் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு:

தடை செய்யப்பட்ட 14 வகையான நெகிழிப் பொருள்களை வணிகா்கள் தவிா்த்து வருகின்றனா். செகண்டரி பேக்கிங் செய்வதற்கு நெகிழியை பயன்படுத்துவதில்லை என வணிகா்கள் தரப்பில் உறுதி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரைமரி பேக்கிங் செய்ய, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் பிபி எனப்படும் பாலிபுரோபைலைன் கவா் பயன்படுத்தப்படுகிறது. இது தவிா்க்க இயலாதது, மேலும் மாற்று இல்லாததும் ஆகும்.

சமீப காலமாக மாவட்ட நிா்வாகம் மூலம் சிறுகுறு தொழில் தயாரிப்பு நிறுவனங்கள், சூப்பா் மாா்க்கெட்டுகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பிபி கவா்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இதனால், சிறுகுறு தொழில் செய்வோா், பலசரக்கு வணிகா்கள், கடைகளில் பணிபுரிவோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளை, காா்பரேட் நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமே வாழ வழிவகை செய்யும். எனவே, பிபி கவா் மீதான நடவடிக்கைகள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com