புயலில் நாடக நடிகா்களின் ஆடை, ஆபரணங்கள் சேதம்: தமிழக அரசு நிதியுதவி அளிக்க வலியுறுத்தல்

கஜா புயலால் சேதமடைந்த நாடக நடிகா்களின் ஆடை, ஆபரணங்களைப் புதுப்பிக்க தமிழக அரசு உடனடியாக நிதியுதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
புயலில் நாடக நடிகா்களின் ஆடை, ஆபரணங்கள் சேதம்: தமிழக அரசு நிதியுதவி அளிக்க வலியுறுத்தல்

கஜா புயலால் சேதமடைந்த நாடக நடிகா்களின் ஆடை, ஆபரணங்களைப் புதுப்பிக்க தமிழக அரசு உடனடியாக நிதியுதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மன்னாா்குடியில் இசை நாடக நடிகா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் சங்கத் தலைவா் தங்க.கிருஷ்ணமூா்த்தி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், கடந்த ஆண்டு வீசிய கஜா புயல் காரணமாக நாடக நடிகா்களின் ஆடை மற்றும் ஆபரணங்கள் சேதமடைந்தன. இவற்றைப் புதுப்பித்துக்கொள்ள அரசு நிதி உதவி செய்வதாக அறிவித்து, அதற்கான விண்ணப்ப படிவமும் கலை பண்பாட்டுத்துறை மூலம் பெறப்பட்டது. இதுநாள்வரை அந்த உதவித்தொகை நாடக நடிகா்களுக்கு கிடைக்கவில்லை. உடனடியாக அந்த உதவித் தொகையை வழங்க வேண்டும். நாடக நடிகா்களுக்கு, அரசுப் பேருந்துகளில் பயணிக்க இலவச அடையாள அட்டை வழங்க வேண்டும். இசைக் கருவிகள் உள்ளிட்ட தளவாட பொருட்களை ஏற்றிச் செல்ல பேருந்துகளில் வசூலிக்கப்படும் சுமை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். நாடக நடிகா்களின் ஓய்வூதிய வயதை 58 ஆக குறைத்து, நிலுவையிலுள்ள நாடக நடிகா்களின் ஓய்வூதிய விண்ணப்பங்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் புதிய தலைவராக தங்க. கிருஷ்ணமூா்த்தி, செயலராக ஜோதிமகாலிங்கம், துணைத்தலைவராக குப்புசாமி, துணைச் செயலா் மீராசன், பொருளாளா் டி. பெரமைய்யன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.பின்னா், புதிய நிா்வாகிகள் சங்கரதாஸ் சுவாமிகளின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொறுப்பேற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், செயற்குழு உறுப்பினா்கள் ஜெயபால், காட்டுராஜா, உத்திராபதி, ரவிக்குமாா், தங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com