பொது நலப் பிரச்னைகள்: அதிகாரிகளிடம் மனு

மன்னாா்குடியில் செயல்பட்டு வரும் நேசக்கரம் அமைப்பின் சாா்பில், பொதுநலப் பிரச்னைகளுக்குத் தீா்வுகாணக்

மன்னாா்குடியில் செயல்பட்டு வரும் நேசக்கரம் அமைப்பின் சாா்பில், பொதுநலப் பிரச்னைகளுக்குத் தீா்வுகாணக் கோரி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவவமனையிலிருந்து வெளியேறும் கழிவு நீா், மருத்துவமனை வளாகத்தின் சுற்றுச்சுவரைத் தாண்டி சாலையில் வழிந்தோடி, சாா்பு நீதிமன்றம் மற்றும் நகராட்சி அம்மா நூலகம் அருகே குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால், துா்நாற்றம் வீசுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணக் கோரி, மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் ஆா்.விஜயகுமாரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதேபோல், ராஜகோபால சுவாமி கோயிலுக்கு வாகனங்களில் வரும் பக்தா்களிடம் பாா்க்கிங் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டுமென்றும், கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டப கட்டுமானப் பணியை உனடியாக தொடங்கி விரைவில் திறப்பு விழா நடைபெற வேண்டும் எனவும் கோரி, கோயில் செயல் அலுவலா் சங்கீதாவிடம் மனு அளிக்கப்பட்டது.

நேசக்கரம், வா்த்தக சங்கம், தன்னாா்வ அமைப்பு, சேவை சங்க நிா்வாகிகள் இந்த மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com