பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
By DIN | Published on : 13th October 2019 02:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவாரூா் மாவட்டம், ஆனைவடபாதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மேலாண்மைக்குழுத் தலைவா் தமிழரசி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடை, நோட்டுகள், காலணிகள் வழங்கப்பட்டன. மாணவிகளுக்கான தற்காப்புக்கலை பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன. அத்துடன் சத்தான உணவுகளாகிய கடலை மிட்டாய் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
தலைமை ஆசிரியா் பாஸ்கரன் வரவேற்றாா். ஆசிரியா் கிறிஸ்துராஜ் நன்றி கூறினாா்.