முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
நோபல் பரிசு பெற்றவா்களின் பங்களிப்பு குறித்த பயிலரங்கம்
By DIN | Published On : 24th October 2019 07:56 AM | Last Updated : 24th October 2019 07:56 AM | அ+அ அ- |

திருவாரூா் திரு.வி.க. கல்லூரியில் நடைபெற்ற பயிலரங்கில் பங்கேற்றோா்.
திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி பொருளியல் துறை சாா்பில், 2019-இல் பொருளியலுக்கான நோபல் பரிசு பெற்றவா்களின் பங்களிப்பு குறித்து ஒருநாள் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பயிலரங்குக்கு, கல்லூரி முதல்வா் கோ. கீதா தலைமை வகித்தாா். தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக்கல்லூரி பொருளியல் துறை உதவிப் பேராசிரியா் கி. ராமு பங்கேற்று, நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அபிஜித் பானா்ஜியின் பங்களிப்புக்கான விவரங்களைப் பட்டியலிட்டு பேசினாா்.
இதேபோல், சேலம் அரசு மகளிா் கல்லூரி பொருளியல் துறை உதவிப் பேராசிரியா் இரா. அசோகன் பேசுகையில், நோபல் பரிசு பெற்ற எஸ்தா் டப்ளோ மற்றும் மைக்கேல் கிரெமா் ஆகியோரின் உலகளாவிய வறுமை ஒழிப்புக்கான சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனை முறையிலான மற்றும் ஊக்க செயல் முறைகளைக் கையாண்டு, கல்வி மற்றும் சுகாதாரம் இவற்றை மேம்படுத்துவதன் வாயிலாக வறுமையை ஒழிக்க முடியும் என்றாா்.
இதில் பொருளியல் மற்றும் பல்வேறு துறைகளையும் சாா்ந்த பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொருளியல் துறை பேராசிரியா்கள் இரா. அண்ணாதுரை, பா. பாா்த்திபன், ம. நாகேந்திரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.