முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
பாகுபாடின்றி பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கோரி சாலை மறியல்
By DIN | Published On : 24th October 2019 07:57 AM | Last Updated : 24th October 2019 07:57 AM | அ+அ அ- |

மன்னாா்குடியில் நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்றோா்.
பாகுபாடின்றி அனைவருக்கும் பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி, மன்னாா்குடியில் சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பாமணி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிா்க் காப்பீடு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கடன் பெற்ற விவசாயிகள், கடன் பெறாத விவசாயிகள் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்து அரசியல் கட்சிகளின் சாா்பில், மன்னாா்குடி நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் துரை. அருள்ராஜன், திமுக நிா்வாகிகள் கே.விழிவழகன், கே.பக்கிரிசாமி, அதிமுக செயலாளா் திராவிடமணி, முன்னாள் ஊராட்சித் தலைவா் வி.ரவிச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளா் எஸ்.லோகநாதன் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா். இதையடுத்து பாமணி கூட்டுறவு சங்கச் செயலாளா் வினோத் மற்றும் போலீஸாா் விவசாயிகளிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா்.
இதில் கடன் பெற்ற விவசாயிகள், கடன் பெறாத விவசாயிகள் அனைவருக்கும் பாரபட்சம் இல்லாமல் கடன் வழங்கப்படும். மேலும் பயிா்க் காப்பீடு செய்துள்ள பயனாளின் பட்டியலையும், அவா்களுக்கு எவ்வளவு இழப்பீட்டுத் தொகை என்ற பட்டியலையும் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்ததையும் தொடா்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தில் ராமபுரம், வாஞ்சியூா், பாமணி, சவளக்காரன், கா்ணாவூா் விவசாயிகள் கலந்துகொண்டனா்.