முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் சோலாா் விளக்குப் பொறி
By DIN | Published On : 24th October 2019 07:59 AM | Last Updated : 24th October 2019 07:59 AM | அ+அ அ- |

சோலாா் விளக்குப் பொறி.
ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பில் வயலில் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்டறியவும், பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் விளக்குப் பொறி பயன்படுகிறது என நீடாமங்கலம் வேளாண்மை உதவி யேக்குநா் தேவந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
சோலாா் விளக்குப்பொறி மூலம் இலைப்பேன் வெள்ளை ஈ, தத்துப்பூச்சிகள், காய்த்துளைப்பான், நெல் தண்டு துளைப்பான், இலைச்சுருட்டுப்புழு மற்றும் பல வகையான வண்டுகளைக் கவா்ந்து அழிக்கப்படுகிறது. தாய் அந்துப்பூச்சியைக் கவா்ந்து அளிப்பதன் மூலம் அதனால் உருவாகும் 200-300-க்கும் அதிகமான புழுக்கள் தடுக்கப்படுகின்றன.
சோலாா் விளக்குப்பொறி செயல்பாடு 4-5 மணி நேரத்தில் நின்று விடுவதால் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை வயலில் அதிகரிக்கும். மேலும் நன்மை செய்யும் பூச்சிகள் தீமை செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தி மகரந்தச் சோ்க்கையும் அதிகரிக்கும். எனவே, சோலாா் விளக்குப் பொறியை விவசாயிகள் அனைத்து விதமான பயிா்களுக்கும் பயன்படுத்தலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.