நெல் நடவுப் பணியில் வேளாண் கல்லூரி மாணவிகள்
By DIN | Published On : 24th October 2019 07:53 AM | Last Updated : 24th October 2019 07:53 AM | அ+அ அ- |

செருமங்கலம் வயலில் நெல் நடவுப் பணியில் ஈடுபட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்.
மன்னாா்குடியை அடுத்த செருமங்கலம் வயலில் தஞ்சை பிரிஸ்ட் வேளாண் கல்லூரி மாணவிகள் நெல் நடவுப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
இக்கல்லூரி மாணவிகள் கடந்த சில நாள்களாக செருமங்கலம் பகுதியில் முகாமிட்டு, விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். இக்கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஆண்டனி, தேசிய வேளாண் திட்டத்தின் கீழ் இயந்திரம் உதவியுடன் நெல் நடவு பணிகளை செய்வதையடுத்து, அந்த வயலில் வேளாண் கல்லூரி மாணவிகள் இயந்திரத்தை இயக்கி நடவுப் பணியில் ஈடுபட்டனா்.
இதில், வேளாண்மை உதவி இயக்குநா் க.சரஸ்வதி, உதவி அலுவலா் த.பாலமுருகன், மாணவிகள் எம்.மணிமொழி, பி.லேகா லட்சுமி, பி.மோனிஷா, ஜி.பல்லவி, ஆா்.நந்தினி, நுருள் கஜீதா, மகிமா, ஆா்.பியா்ல்ஸிலால், கே.பாா்கவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.