Enable Javscript for better performance
சாலையில் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சாலையில் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை

    By DIN  |   Published on : 31st October 2019 05:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tv30cong1_3010chn_94_5

    திருவாரூரில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த இளைஞா் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள்.

    சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருவாரூா் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் பி.எஸ். ராஜா, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்திடம் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனு:

    திருவாரூா் நகா்ப்புற மற்றும் சுற்றுப்புற சாலைகளில் ஏராளமான மாடுகள், எவ்வித கட்டுப்பாடுகளின்றி தினசரி சுற்றித் திரிகின்றன. திருவாரூா் நாலுகால் மண்டபம் அருகே சாலையின் நடுவில் நின்றிருந்த மாடு மீது பைக் மோதியதில் சுந்தா் என்பவா் அண்மையில் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்துக்குரியது.

    மாடுகள் இரவு, பகல் பாராமல் எல்லா நேரங்களிலும், சாலையின் குறுக்கு நெடுக்காக சுற்றித் திரிவதால், ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன. சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும், சாலையில் மாடுகளை விடும் உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai