சுடச்சுட

  

  மோசமான நிலையில் உள்ள பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தி, நன்னிலம் அருகே பூந்தோட்டம் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
   பூந்தோட்டம் கடைத்தெருவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கிளைச் செயலாளர் மாரி. செல்வராஜ் தலைமை வகித்தார். இதில், பூந்தோட்டம் கடைத்தெருவில் பேருந்து பயணிகளுக்கான நிழற்குடை, கழிவறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
  அகரதிருமாளம் ஊராட்சிக்குட்பட்ட வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்களைத் தூர்வார வேண்டும். சந்தைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும். அகரதிருமாளத்தில் இறந்தவர்களின் ஈமக்கிரியை கட்டடப் பணிகளை முழுவதுமாக நிறைவுசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்கள்
  எழுப்பப்பட்டன. 
  கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, நன்னிலம் ஒன்றியச் செயலாளர் டி.வீரபாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர் தியாகு.ரஜினிகாந்த், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.சுந்தரமூர்த்தி, எஸ்.எம். சலாவுதீன், டி.பி.ராஜா, கே.எம். லிங்கம் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai