சுடச்சுட

    

    வண்டாம்பாளை மாரியம்மன் கோயிலைத் திறக்க நடவடிக்கை: அமைச்சர் ஓ.எஸ். மணியன் உறுதி 

    By DIN  |   Published on : 13th September 2019 06:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நன்னிலம் அருகே உள்ள வண்டாம்பாளை மகா மாரியம்மன் கோயிலை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். 
    வண்டாம்பாளை மகா மாரியம்மன் கோயில் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென பூட்டப்பட்டது. இதன் காரணமாக பக்தர்கள் கோயில் வெளியே பூஜை செய்து வழிபட நேர்ந்தது. இந்நிலையில், வண்டாம்பாளை கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமைச்சர் ஓ.எஸ். மணியன் வந்தார். அப்போது, மகா மாரியம்மன் கோயில் வாசல் பூட்டப்பட்டு, பக்தர்கள் வெளியில் நின்று வழிபட்டதைக் கண்ட அவர், பக்தர்களிடம் விவரத்தைக் கேட்டறிந்தார். 
    அப்போது, கோயிலைத் திறக்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்த போதிலும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் பேசி, கோயிலை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் உறுதியளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai