சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனத்தைப் பார்வையிட்ட மாணவர்கள்

திருவாரூர் அருகே காட்டூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி வாகனத்தை மாணவர்கள் வியாழக்கிழமை பார்வையிட்டனர்.

திருவாரூர் அருகே காட்டூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி வாகனத்தை மாணவர்கள் வியாழக்கிழமை பார்வையிட்டனர்.
சாலைப் பாதுகாப்பு குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பெறும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நாகை மண்டலம் சார்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி வாகனம் அண்மையில் நாகையில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த வாகனம், நாகை மண்டலத்துக்கு உள்பட்ட திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்வி நிறுவனங்கள் முன் நிறுத்தப்பட்டு, மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். 
இதன்படி, திருவாரூர் அருகே காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் இந்த விழிப்புணர்வு வாகனத்தை வியாழக்கிழமை கண்டுகளித்தனர். இதில், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பெறும் வகையில், சாலைப் பாதுகாப்பு குறித்து ஓவியங்கள், படியில் பயணம் செய்யக் கூடாது, மது அருந்திவிட்டு வாகனங்களில் செல்லக் கூடாது, தலைக்கவசம் அவசியம், வளைவுகளில் முந்திச் செல்லக் கூடாது, வாகனங்களில் செல்லும்போது செல்லிடப்பேசி பயன்படுத்தக் கூடாது ஆகிய கருத்துகளை உள்ளடக்கி
காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com