அண்ணா பிறந்த நாள் கொண்டாட்டம்

திருவாரூர் மாவட்டத்தில், அண்ணாவின் 111-ஆவது பிறந்தநாள், பல்வேறு அமைப்புகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


திருவாரூர் மாவட்டத்தில், அண்ணாவின் 111-ஆவது பிறந்தநாள், பல்வேறு அமைப்புகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அதிமுக சார்பில்...
அண்ணா பிறந்தநாளையொட்டி, அதிமுக சார்பில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கடைவீதி, நேதாஜி சாலை வழியாக அண்ணா சிலை வரை இந்த பேரணி நடைபெற்றது. பின்னர், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, நகரச் செயலாளர் ஆர்.டி. மூர்த்தி தலைமை வகித்தார். இதில் ஜெ. பேரவை நகரச் செயலாளர் எஸ். கலியபெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
கலைஞர் நற்பணி மன்றம் சார்பில்..
  திருவாரூர் காட்டுக்காரத் தெருவில் மாவட்ட கலைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் த. செந்தில் தலைமை வகித்தார். மன்றத்தின் தலைவர் எஸ்.என். அசோகன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அண்ணாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
  இதில், திமுக நகரச் செயலாளர் எஸ். பிரகாஷ், மாணவரணி அமைப்பாளர் அமுதா சந்திரசேகர், கலை இலக்கிய மாவட்ட அமைப்பாளர் ராஜ் (எ) கருணாநிதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருவாரூர் தமிழ்ச் சங்கம்சார்பில்...
திருவாரூர் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் தலைவர் இரெ. சண்முகவடிவேல் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், செயலாளர் ஆரூர் செ. அறிவு, துணைத் தலைவர் சக்தி செல்வகணபதி, கலியமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நீடாமங்கலத்தில்...
நீடாமங்கலத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை  கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு, அ.தி.மு.க.வினர் நீடாமங்கலம் தெற்கு ஒன்றியச் செயலாளர்
கோ.அரிகிருஷ்ணன் தலைமையிலும், வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஆதிஜனகர், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சா. செந்தமிழ்ச்செல்வன், நகரச் செயலாளர் இ.ஷாஜஹான் ஆகியோர் முன்னிலையிலும், ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். 
இதேபோல், தி.மு.க.வினர் மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ.சித்தமல்லி ந.சோமசுந்தரம் தலைமையிலும், முன்னாள் எம்.எல்.ஏ. பி.ராஜமாணிக்கம், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர்  விசு. அண்ணாதுரை, நகரச் செயலாளர் ஆர்.ராஜசேகரன் ஆகியோர் முன்னிலையிலும், ஊர்வலமாகச் சென்று அண்ணாசிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
வலங்கைமானில்...
இதேபோல், வலங்கைமானில் அ.தி.மு.க.வினர் நகரச் செயலாளர் சா.குணசேகரன் தலைமையிலும், கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் இளவரசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயஇளங்கோவன் முன்னிலையிலும் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க.வினர் வலங்கைமான் மேற்கு ஒன்றியச் செயலாளர் வீ.அன்பரசன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில், கடைவீதி பகுதியிலிருந்து ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலையணிவித்தனர்.
அமமுக வலங்கைமான் கிழக்கு ஒன்றியச் செயலாளர் வீ.விவேக் ,மேற்கு ஒன்றியச் செயலாளர் வின்சென்ட் ஆகியோர் தலைமையிலும், நகரச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டி ஆகியோர் முன்னிலையிலும், அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
கூத்தாநல்லூரில்...
 கூத்தாநல்லூரில் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக மற்றும் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாண்டுக்குடி புதுப்பாலத்தில் உள்ள அண்ணா சிலைக்கு, திமுக நகரச் செயலாளர் எஸ்.எம்.காதர்உசேன் தலைமையில் திமுகவினரும், லெட்சுமாங்குடி பாலம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு அதிமுக நகரச் செயலாளர் டி.எம்.பஷீர் அஹம்மது தலைமையில் அதிமுகவினரும்
மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
மன்னார்குடியில்...
அதிமுக சார்பில் மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலர் கா.தமிழ்ச்செல்வம் தலைமையில், மேலராஜ வீதியில் உள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ருக்மணிப்பாளையம் வந்து, அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், கிழக்கு ஒன்றியச் செயலர் தங்க தமிழ்க்கண்ணன், ஜெ. பேரவை மாவட்டச் செயலர் பொன். வாசுகிராம், நகரச் செயலர் மாரிமுத்து, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.ஜி.குமார், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி மோகனவேல், நகரத் துணைச் செயலர் என்.அன்புச்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் எஸ். கலைவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 திமுக சார்பில், மன்னார்குடி நகரச் செயலர் வீரா.கணேசன் தலைமையில், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.பாலு, மேற்கு ஒன்றியச் செயலர் க.தனராஜ், நகர அவைத் தலைவர் த.முருகையன் உள்ளிட்ட திமுக மற்றும் கட்சியின் சார்பு அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 அமமுக சார்பில் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.காமராஜ் தலைமையில், அன்னவாசல் தெருவில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், கட்சியின் மாநில அமைப்புச் செயலர் சிவா. ராஜமாணிக்கம், நகரச் செயலர் ஆ. ஆன்தராஜ், ஒன்றியச் செயலர்கள் க. அசோகன், ரெங்கராஜ், மாநில நிர்வாகிகள் க. மலர்வேந்தன், சத்தியமூர்த்தி உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.
அண்ணா திராவிடர் கழகம் சார்பில், மூன்றாம் தெருவில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து, கட்சியின் மாநில பொதுச் செயலர் வி. திவாகரன் தலைமையில், பிரதான வீதிகளின் வழியாக அக்கட்சியினர் ஊர்வலமாக வந்து, ருக்மணிக்குளத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். 
இதில், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் வி.கே.இளந்தமிழன், டி.என்.பாஸ்கர், மாவட்ட நிர்வாகி சரவணமூர்த்தி, நகர நிர்வாகி சுஜய், ஒன்றிய நிர்வாகிஎம்.சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com