கூத்தாநல்லூர் பேருந்து நிலையத்தை புதுப்பிக்கக் கோரி மனு
By DIN | Published On : 19th September 2019 02:34 AM | Last Updated : 19th September 2019 02:34 AM | அ+அ அ- |

கூத்தாநல்லூர் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க வலியுறுத்தி, திருவாரூர் சட்டப் பேரவை காங்கிரஸ் பொறுப்பாளர் எஸ்.எம். சமீர், தமிழக போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணனுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அதன் விவரம்: கூத்தாநல்லூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலா, புதிய பேருந்து நிலையம் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்துள்ள நிலையில் உள்ளது. கூத்தாநல்லூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 55 கிராமங்களில் வசிக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்காக இருக்கும் இந்த பேருந்து நிலையத்தை உடனடியாக பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கூத்தாநல்லூரிலிருந்து, திருவாரூர், மன்னார்குடி, திருச்சி, வடபாதிமங்கலம், கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கும் பேருந்துகளை இயக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.