விவசாயிகளுக்கு காய்கறி விதை வழங்கும் பணி
By DIN | Published On : 19th September 2019 02:35 AM | Last Updated : 19th September 2019 02:35 AM | அ+அ அ- |

முத்துப்பேட்டை வட்டாரத்தில் முதலமைச்சரின் கிராமப்புற வீட்டு காய்கறி உற்பத்தி திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு காய்கறி விதைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
இத்திட்டத்தின்கீழ் வெண்டை, கத்தரி, முருங்கை, தட்டைப்பயிறு, சுரக்காய், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட ஏழு வகையான காய்கறி விதைகள் மற்றும் ஒரு கிலோ தொழு உரம், காய்கறி உற்பத்தி தொழில்நுட்ப கையேடு ஆகியவைகள் அனைத்து ஊராட்சிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, முத்துப்பேட்டை வட்டாரத்தில் ஒரு ஊராட்சியில் புதன்கிழமை விவசாயிகளுக்கு காற்கறி விதைகள் வழங்கப்பட்டன. விதை வழங்கும் பணியில் தோட்டக்கலை உதவி அலுவலர்கள் சுப்பிரமணியன், கார்த்திக் ஆகியோர் ஈடுபட்டனர்.