Enable Javscript for better performance
அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுகவினர்- Dinamani

சுடச்சுட

    

    அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுகவினர்

    By DIN  |   Published on : 23rd September 2019 07:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடியில் அமமுகவை சேர்ந்தவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் அமைச்சர் ஆர். காமராஜ் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனர்.
     திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் மேற்கு ஒன்றிய அமமுக  மாவட்ட பிரதிநிதி மணலூர் ஊராட்சி மணக்குண்டு எஸ்.செந்தில்குமார், கிளைச் செயலர் ஜி. சுப்பிரமணி ஆகியோர் அமைச்சரும், திருவாரூர் மாவட்டச் செயலாளருமான ஆர்.காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்போது, ஒன்றியச் செயலர் சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
     இதேபோல், நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய அமமுகவை சேர்ந்த மாவட்ட பிரதிநிதி ஆர்.மாதவராஜ், ஊராட்சி முன்னாள் தலைவர் துரைராஜ், பெரம்பூர் ஊராட்சி செயலர் அசோகன், கிளைச் செயலர் காமராஜ், முல்லைவாசல் கிளைச் செயலர் காமராஜ், அவைத்தலைவர் இளமாறன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இருந்து விலகி, அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
    நிகழ்ச்சியில், ஒன்றியத் துணைச் செயலர் ஆதி.ஜனகர், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் பெருந்தலைவர் எம்.ஆர். அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai